முல்லை பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இன்ஜினியர் மாணவன் உடல் கண்டுபிடிப்பு


தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில்  குளிக்கச் சென்ற கல்லூரி மாணவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்த  நிலையில் காமயகவுண்டன்பட்டி, நாராயண தேவன் பட்டி இடையே மாணவனின் உடல் கண்டுபிடிப்பு கம்பம்11வது வார்டு பகுதியை சேர்ந்த அஸ்கர் அலி (44)  டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவரது மகன் முகமது யூனிஸ் (20 ) மதுரை அருகே மேலூரில் வைகை கல்லூரியில் இன்ஜினியர் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் இவர் நேற்று நண்பர்களுடன் கம்பம் அருகே சுருளிப்பட்டி ரோட்டில் முல்லைப் பெரியாற்றில் தொட்டமான் துரை என்கிற இடத்தில் நண்பர்களுடன்  குளிக்க சென்றுள்ளார் எதிர்பாராதவிதமாக யூனிஸ் குளிக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினரும் மற்றும் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாரும் இணைந்து இரண்டாம் நாளாக விடா முயற்சி இன்றி தேடி வந்தன மேலும் தேவாரம் பகுதியில் இருந்து முல்லைப் பெரியாற்றில் கல்லூரி மாணவனை கம்பம் நோக்கி துறை சார்ந்த அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தேடி தேடிவந்தனர் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு செவ்வாய் மதியம் 2 மணி அளவில் மாணவனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கீதா அறிவுறுத்தலின் பெயரில் சார்பு ஆய்வாளர் முத்துச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்